ஸ்ரீரங்கத்தில் மூலவர் பெரிய பெருமாள் திருவடியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் : போலீசாரின் கெடுபிடிகளால் பாமர மக்கள் தவிப்பு

Dec 29, 2025 - 19:59
 0  61
ஸ்ரீரங்கத்தில் மூலவர் பெரிய பெருமாள் திருவடியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் : போலீசாரின் கெடுபிடிகளால் பாமர மக்கள்  தவிப்பு

ஸ்ரீரங்கத்தில் மூலவர் பெரிய பெருமாள் திருவடியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் : போலீசாரின் கெடுபிடிகளால் பாமர மக்கள் தவிப்பு 

   

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெரு​விழா கடந்த 19-ம் தேதி தொடங்​கியது. தொடர்ந்து பகல் பத்து உற்​சவம், இராப்பத்து உற்சவம் என 21 நாட்கள் விழாவில் தற்போது பகல் 10 கடைசி நாள் நடைபெற்று வருகிறது. 

இந்த விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​களுள் ஒன்றான வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் தோன்றும் நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் சொர்க்கவாசல் திருவிழாவின் 21 நாட்கள் மட்டுமே மூலவர் பெரிய பெருமாள் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். வருடத்தின் இந்த 21 நாட்கள் மட்டுமே முத்தங்கி சேவையில் காட்சியளிக்கும் மூலவர் பெரிய பெருமாளையும், அவரது திருவடியையும் காண லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து செல்வர்.

அந்த வகையில், பகல் 10 இறுதி நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நம்பெருமாள் புறப்பாடு மற்றும் மூலவர் பெரிய பெருமாளையும் தரிசிக்க கோவிலுக்கு திரண்டனர். பல மணி நேரம் காத்திருந்து நம்பெருமாள் புறப்பாடு மற்றும் மூலவரை தரிசிக்க வந்த பக்தர்கள் போலீசாரின் கெடுபடியால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல மணி நேரம் காத்திருந்தவர்களை உற்சவர் புறப்பாட்டின்போது தடுத்து நிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் பொதுமக்கள் பக்தர்கள் கடுமையாக தங்களது அதிருப்திகளை காவல்துறைக்கு எதிராக தெரிவித்தனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நெரிசலைக் கையாளும் முறையான மேலாண்மை இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் எதற்காக நிற்கின்றோம் என்ற அறியாமலேயே பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் முக்கிய பிரமுகர்கள் என தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் வருகை தருவதால் அவர்களை கையாளுவதே போலீசாரின் வேலையாக இருப்பதால் பாமர மக்களுக்கு பெரும் கெடுபிடிகள் ஸ்ரீரங்கத்தில் தொடர்கிறது.

அதேபோல், முத்தங்கி சேவையில் காட்சி தரும் மூலவர் பெரிய பெருமாளின் திருவடியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மூலவர் பெரிய பெருமாளின் உருவத்தில் பாதியை மட்டும் காணுமாறு கோவில் நிர்வாகத்தினர் தடுப்புகளை ஏற்படுத்தியதால், முத்தங்கியில் காட்சித் தந்த பெரிய பெருமாளின் திருவடியை தரிசிக்க முடியாமல் ஏக்கத்துடனும், வருத்தத்துடனும் திரும்பி சென்றனர்

ஸ்ரீரங்கம் மட்டுமல்ல திருமால் வீற்றிருக்கும் இடங்களில் எல்லாமே பக்தர்கள் முதலில் திருவடியை வணங்குவது தான் வழக்கம் திருவடியை வணங்கி தான் பெருமாளை முழுவதுமாக உள்ளுணர்வர்.

அந்த வகையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திருவிழாவில் கூட்டத்தை காரணம் காட்டி திருவடி தரிசனத்தை தடை செய்த கோவில் நிர்வாகம், கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை பக்தர்கள் வேதனையுடன் விமர்சித்து செல்வதை ஸ்ரீரங்கத்தில் காண முடிந்தது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0