திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்: பாதியில் வெளியேறிய நேருவின் ஆதரவு கவுன்சிலரால் பரபரப்பு

Dec 29, 2025 - 15:37
 0  75
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்:  பாதியில் வெளியேறிய நேருவின் ஆதரவு கவுன்சிலரால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்: பாதியில் வெளியேறிய நேருவின் ஆதரவு கவுன்சிலரால் பரபரப்பு 

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் துணை ஆணையர் வினோத், பாலு, நகரப் பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும், நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே, திருச்சி 60 வது வார்டு கவுன்சிலரும், காஜாமலை பகுதி திமுக செயலாளருமான காஜாமலை விஜய் தனது வார்டில் மக்கள் நலத்திட்ட பணிகள் குறித்து பல ஆண்டுகளாக மாநகராட்சியில் மேயரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை, மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது, காஜாமலை பகுதிகள் பாறைகளாக இருக்கிறது எனக்கூறி கழிவு நீர் வடிகால் பணி மேற்கொள்ளாமல் இருப்பது குறித்து பலமுறை மேயர் இடம் கூறியும் எந்த பலனும் இல்லை, கவுன்சிலர் காஜாமலை காஜாமலை விஜி வார்டு என்பதற்காக இந்த பணியை செய்ய வேண்டாம், அமைச்சரின் (கே என் நேரு) தொகுதி என்பதற்காகவாது இந்த பணிகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என பேசினார்.

 அதற்கு மேயர் சரியான பதில் கூறவில்லை என்பதால், நான் இந்த மான்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறேன் எனக் கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார் காஜாமலை விஜய்.

 மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறிய பின்பு அந்த JE மற்றும் AC ஆகியோர் நாங்கள் பணிகளை மேற்கொண்டால் அதை பணிகளை நிறுத்த சொல்வதே காஜாமலை விஜி தான் என அவர் மீது புகார் தெரிவித்தனர்.

 காஜாமலை விஜி மற்றும் மேயர் அன்பழகன் இருவரும் அமைச்சர் கே என்ருவின் தீவிர விசுவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக, இன்றைய மாமன்ற கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் பேசுகையில்: கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாட்டு நடவடிக்கை உடனடி அறிவிப்பு வேண்டும். 

  குப்பைக்கிடங்கு மண்டலத்திற்கு ஒன்று என், 5 குப்பைக்கிடங்கு அமைக்க வேண்டும்.

 பால்பண்ணை முதல் துவாக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை விளக்கு சீர் செய்ய நெடுஞ்சாலைத் துறையினை அறிவுறுத்தவேண்டும்.

  நினைவூட்டல் : பால்பண்ணை வாகன நெரிசலை சீர் செய்ய, அரியமங்கலம் இரயில்வே பாலத்தின் இறக்கத்தில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையிலிருந்து, இந்து பத்திரிக்கை அருகில் உள்ள மதுரை நெடுஞ்சாலை அணுகு சாலை வரை புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0