திருச்சி மாநகரில் 2025-ல் மட்டும் 102 பேர் மீது குண்டாஸ்- காவல் ஆணையர் ந.காமினி

Dec 26, 2025 - 15:32
 0  6
திருச்சி மாநகரில் 2025-ல் மட்டும் 102 பேர் மீது குண்டாஸ்- காவல் ஆணையர் ந.காமினி

திருச்சி மாநகரில் 2025-ல் மட்டும் 102 பேர் மீது குண்டாஸ்-
காவல் ஆணையர் ந.காமினி

  

  திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் கெட்ட நடத்தைக்காரர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
  குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க, திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
  அதனடிப்படையில், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்கள் மற்றும் 2025-ல் மட்டும் 36 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் உட்பட 102 நபர்கள் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் ந.காமினி பரிந்துரைத்ததின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சி மாநகரில் மட்டும் 2025-ம் ஆண்டில் 102-பேர் மீது மாவட்ட நிர்வாகம் குண்டாஸ் போட்டு, திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
   திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0