எம்ஜிஆர் நினைவு தினம்; அன்னதானம் வழங்கிய முன்னாள் எம்பி ப.குமார்

Dec 24, 2025 - 20:30
 0  6
எம்ஜிஆர் நினைவு தினம்; அன்னதானம் வழங்கிய முன்னாள் எம்பி ப.குமார்

எம்ஜிஆர் நினைவு தினம்; அன்னதானம் வழங்கிய முன்னாள் எம்பி ப.குமார்

எம்ஜிஆரின் 38 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சிஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட சார்பில் பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு, திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் மலர் தூவி மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் , ஒன்றிய கழக செயலாளர்கள் இராவணன், SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் , எஸ்.பாஸ்கர் (எ) கோபால்ராஜ், ஏ,தண்டபாணி, பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், துவாக்குடி நகர கழகச் செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழகங்களை சார்ந்த நிர்வாகிகள் கிளை, வட்ட, வார்டு, கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் கழக செயல் வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட லால்குடி, மணப்பாறை, துவாக்குடி என பல்வேறு பகுதிகளிலும் முன்னாள் எம்பி ப.குமார் தலைமையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் திரு உருவ படங்களுக்கு மரியாதை செலுத்தி, எம்ஜிஆர் வழியில் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0