இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; கணவர் குடும்பத்தை கத்தியால் தாக்கியவர்கள் மீது வழக்கு-திருச்சியில் பரபரப்பு
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; கணவர் குடும்பத்தை கத்தியால் தாக்கியவர்கள் மீது வழக்கு-திருச்சியில் பரபரப்பு
திருவெறும்பூர் அருகே கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதால் மனம் உடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இறந்தவரின் சகோதரர்கள் கணவர் மற்றும் மாமியாரை கத்தியில் வெட்டிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுள்ளக்குடியை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவரது மனைவி கனிமொழி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லை என்றும், இதனால் ஜான் பிரிட்டோ குமரேசபுரம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகின்றது. ஜான் பிரிட்டோவிற்கும் கனிமொழிக்கும் மேற்க்கண்ட காரணங்களால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே கடும் சண்டை எழுந்துள்ளது. அதனால் கனிமொழி அவருடைய அண்ணன் திலீப் என்பவருக்கு போன் மூலம் ஊருக்கு வந்து விடுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திலீப் தனது உறவினர் ராஜேஷ் என்பவரையும் தனது அம்மா மங்களம் மேரி யையும்
அழைத்துக் கொண்டு ஊரிலிருந்து கீழ முல்லக்குடிக்கு நள்ளிரவு வந்திருக்கின்றனர். வீட்டில் கனிமொழியின் பெட்ரூம் கதவு உள்தாளிட்டு இருந்ததால் ராஜேஷ் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கனிமொழி துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கியிருக்கின்றார். பதறியடித்து துப்பட்டாவை அறுத்து கீழே இறக்கியுள்ளார்கள்.
கோபத்தில் இறந்த திலீப் வீட்டில் கிடந்த சிறிய கத்தியால் ஜான் பீட்டர் தலை மற்றும் இரண்டு கால்களில் வெட்டியதில் ஜான் பிரிட்டோவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அதை தடுக்க வந்த ஜான் பீட்டர் அம்மாவையும் தாக்கியுள்ளனர்.
பின்னர் கனிமொழியை ராஜேஷ், திலீப், அவர் அம்மா ஆகியோர் வாடகை கார் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கனிமொழியை பரிசோதனை செய்த மருத்துவர் கனிமொழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். கனிமொழி-ஜான் பீட்டர் தம்பதியருக்கிடையே திருமணமாகி ஆறு ஆண்டுகள் மட்டுமே ஆவதால் திருச்சி ஆர்டிஓ இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் காயம் அடைந்த ஜான் பீட்டர் பாத்திமா மேரியும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0