பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது?: கைதுக்கு பின்னணி என்ன?
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது? கைதுக்கு பின்னணி என்ன?
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமாக திகழ்பவர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருகிறார்.
இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர். சவுக்கு சங்கருடன் சேர்த்து அவரது யூடியூப் சேனலில் பணியாற்றும் மேலும் 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
படத் தயாரிப்பாளர் கொடுத்த வழக்கில் சவுக்கு சங்கரை கைது செய்வதற்காக, இன்று காலை சென்னை மாநகர போலீஸ் படையினர் அவரது வீட்டை சுற்றி வளைத்தனர். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீசாரால் உடனடியாக கைது செய்ய முடியவில்லை.வீட்டினுள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீசார் வந்துள்ளதாக, வீடியோ வெளியிட்டார். வேறு வழியில்லாத நிலையில், வழக்கறிஞர்கள் வரும் வரை போலீசார் காத்திருந்தனர். வந்த வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. தீர்வு எதுவும் ஏற்படாத நிலையில், வீட்டின் கதவை உடைக்கும் முயற்சியில் தீயணைக்கும் படையினர் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0