கூட்டணி முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம்: த.வெ.க மா.செ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?

Dec 11, 2025 - 16:39
Dec 11, 2025 - 16:51
 0  25
கூட்டணி முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம்: த.வெ.க மா.செ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?

கூட்டணி முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம்: த.வெ.க மா.செ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?

சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகத் தலைமை குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சி தலைவா் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், தோ்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஈரோட்டில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள விஜய்யின் பொதுக்கூட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது வரை அலுவலகத்துக்கு வரவில்லை. கூட்டத்தில் கீழ்காணும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1 : ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

தீர்மானம் 2: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

தீர்மானம் 3 : இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

தீர்மானம் 4 : அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாவது; சமூக நீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லும் பொழுது மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைப்பது ஒரு கண்துடைப்பு. கண்டிப்பாக இதற்கான அனைத்து போராட்டங்களிலும் தவெக பங்கெடுக்கும்.

ஒரு நல்ல விசயம் குறித்து பாமக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது குறித்து கட்சித் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டு, கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.

முன்னதாக, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்து பாமக சார்பில் வரும் 17 ம் தேதி சாதி வாரிய கணக்கெடுப்பு குறித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தவெக பங்கேற்க அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0