மாட்டுக்கு QR கோடு இருக்கு எனக்கூறி பொதுக்கூட்டத்துக்கு மாடுடன் வந்த தவெக தொண்டர்

Dec 9, 2025 - 12:04
 0  31
மாட்டுக்கு QR கோடு இருக்கு எனக்கூறி பொதுக்கூட்டத்துக்கு மாடுடன் வந்த தவெக தொண்டர்

மாட்டுக்கு QR கோடு இருக்கு எனக்கூறி பொதுக்கூட்டத்துக்கு மாடுடன் வந்த தவெக தொண்டர் 

 

மாட்டுக்கு QR கோடு இருக்கு எனக்கூறி பொதுக்கூட்டத்துக்கு அழைத்து வந்த தவெக தொண்டர்களால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கிய விஜய், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூர் நிகழ்ச்சியில், பங்கேற்ற போது பெரும் துயர சம்பவம் நடந்தது. அதன்பிறகு அரசியல் பணிகளை விட்டுவிட்டு த.வெ.க. கட்சியினர் அமைதியாக இருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் அரசியல் பணிகளை தொடங்கினர். அதன்பிறகு காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் மக்கள் சந்திப்பு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. 

இந்நிலையில், 73 நாட்களுக்கு பிறகு, புதுச்சேரியில் தனது பிரச்சார வாகனத்தில் பொதுவெளியில் தோன்றி த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தவெக தலைவர் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு 5,000 நபர்கள் மட்டுமே அனுமதி என்ற நிலையில், க்யூ ஆர் கோடு வழங்கப்பட்டு அவர்களை மட்டுமே பொதுக் கூட்டத்திற்கு அனுமதித்தனர். 

இந்நிலையில் சில தொண்டர்கள் அனுமதிக்காத பட்சத்தில் மாடுகளுக்கு QR கோடு எனக்கூறி மாடுகளை அழைத்து வந்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 முன்னதாக, காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி ஆனந்தை கடுமையாக பெண் காவல் உயரதிகாரி எச்சரித்தார்.

 புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்ககோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் ஆத்திரமடைந்த பெண் காவல் அதிகாரி, உங்களால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்திருக்கின்றனர். யாரேனும் உயிர் இழந்தால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம் என புஸ்சி ஆனந்தை கடுமையாக எச்சரித்தார். இருசக்கர வாகனத்தில் சாலை சாலையாக சென்று பொது மக்களையும் தொண்டர்களையும் ஒருங்கிணைத்தார் புஸ்லி ஆனந்த்

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0