புதுச்சேரி விஜய் கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது: பாஸ் இல்லாத நிலையிலும் அனுமதி
புதுச்சேரி விஜய் கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது: பாஸ் இல்லாத நிலையிலும் அனுமதி
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சியினரும் தங்களது பிரச்சார வியூகங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் , பொதுமக்களை சந்திப்பதற்கு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகிறார். கரூர் துயரத்திற்குப் பின் முதல் பொதுவெளி சந்திப்பாக புதுச்சேரியில் தனது பிரச்சார கூட்டத்தை இன்று காலை துவக்கி இருக்கிறார்.
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை தமிழக வெற்றிக்கழகம் பொதுக்கூட்டம் நடத்திட போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், எதிர்பார்த்த கூட்டம் கூடாததால் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தற்போது பாஸ் இல்லாதவர்களும் திடலில் கூடி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த தவெக பிரமுகர் பிடிபட்டார். தொண்டர்கள் கூட்ட அரங்கிற்குள் செல்லும் போது மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்கையில் அந்தநபரிடம் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் எதற்காக வந்தார் என அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கியுடன் ஒருவர் பிடிப்பட்ட நிலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0