சென்னையில் ஜாக்டோ ஜியோ காத்திருப்பு போராட்டம்: நிர்வாகிகளை வீட்டுக்காவலில் அடைத்த தமிழக அரசு : கடும் கண்டனத்தை தெரிவிக்கும் போராட்டக் குழு

Dec 7, 2025 - 20:38
 0  313
சென்னையில் ஜாக்டோ ஜியோ காத்திருப்பு போராட்டம்: நிர்வாகிகளை வீட்டுக்காவலில் அடைத்த தமிழக அரசு : கடும் கண்டனத்தை தெரிவிக்கும் போராட்டக் குழு

சென்னையில் நாளை ஜாக்டோ ஜியோ காத்திருப்பு போராட்டம்  : நிர்வாகிகளை வீட்டுக்காவலில் அடைத்த தமிழக அரசு : கடும் கண்டனத்தை தெரிவிக்கும் போராட்டக் குழு 

10,000 தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் நாளை டிசம்பர் 8 ஆம் தேதி சென்னை தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு ஆயத்தப் பணிகளில் முழு விச்சில் இறங்கின.

அதன் ஒரு கட்டமாக நாளை 08.12.2025 டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் நடைபெறும் டி.பி.ஐ. வளாக காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து வருகை தருவோர் சென்னை எழும்பூரில் ஒன்று கூடி அங்கிருந்து பேரணியாக டி.பி.ஐ. வளாகம் சென்று காத்திருப்புப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், தலைநகர் சென்னைக்கு இன்று புறப்பட விருந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தமிழக போலீசார் வீட்டுக்காவலில் தற்போது அடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி, ராமநாதபுரம், கும்பகோணம், நாகை என பல்வேறு மாவட்டங்களிலும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட செயலாளருமான சே. நீலகண்டன் திருச்சி உறையூர் காவல் ஆய்வாளர் தலைமையில் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் நாகை மாவட்ட நிர்வாகி லட்சுமி நாராயணன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிவபாலன் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்ட துணைச் செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுரேஷ் ராஜ் கைது செய்யப்பட்டு ஶ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணை பொது செயலாளர் ந.ரெங்கராஜன் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் : தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பட்சத்தில் ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதிகளாக சொன்னவைகளை செய்யாத காரணத்தினால் நாளை டிட்டோஜாக் சார்பில் நாளை 8.12.2025 அன்று காத்திருப்பு போராட்டம் அறிவித்து புறப்படக்கூடிய நிலையில், ஆசிரியர்களை ஆங்காங்கே கைது செய்து வீட்டுக் காவலில் வைப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பது போன்று ஆகும்.

ஆகவே தமிழ்நாடு அரசு போராடக் கூடிய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வேண்டும். மாறாக கைது செய்வதை அகில இந்திய ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது என அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணை பொது செயலாளர் ந.ரெங்கராஜன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறவழியில் போராடும் ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்வது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0