விவசாயிகள் சங்கத் தலைவருக்கு சிறை : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் சங்கத் தலைவருக்கு சிறை : மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாளை நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர்.பாண்டியனுக்கு, ஓஎன்ஜிசி பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
காவேரி டெல்டாவில் ஓஎன்ஜிசி ஹைட்ரோ கார்பன் எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்க விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த விவசாயிகளின் போராளி ஐயா பி ஆர் பாண்டியன் மீது திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் ஓஎன்ஜிசி தொடரப்பட்ட பொய் வழக்கினை தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் எங்களது சங்கம் தொடர்ந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டில் சுட்டிக்காட்டிய நிலையில் பசுமை தீர்ப்பாயமே இது பொய் வழக்கு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அப்போது தடை விதித்தது மேலும் எங்களது போராட்ட உணர்வுகளை ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசே காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தும். புதிய திட்டங்கள் தொடர்வதை தொடர்ச்சியாக மத்திய மாநில அரசுகள் அனுமதிக்காமலும் இருந்து வரும் இந்த நிலையில் நீதிமன்றத்தின் தற்போதைய இந்த தீர்ப்பு மக்களின் விவசாயிகளின் உணர்வுகளுக்கு முரணாக உள்ளது.
எனவே, மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 08 12. 2025 மதியம் 12.00 மணி அளவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து விவசாய சங்கங்களும். மாவட்ட நிர்வாகிகளும் விவசாயிகளும் பங்கேற்று விவசாயிகளின் உணர்வுகளை வெளிப்படுத்திட வேண்டுகிறேன்.
மேற்கண்டவாறு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0