ஓஎன்ஜிசி விவகாரம்: விவசாயிகள் சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை : விவசாயிகளுக்கு கருப்பு தினம் இன்று

Dec 6, 2025 - 18:57
 0  36

திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது சம்பந்தமான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு இது ஒரு கருப்பு நாள் என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

க. சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0