திருச்சியில் அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்; 160 பயணிகளுடன் வானில் நீண்ட நேரம் வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு
திருச்சியில் அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்; 160 பயணிகளுடன் வானில் நீண்ட நேரம் வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு
திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 160 பயணிகளுடன் துபாய் புறப்பட்டு சென்றது மதியம் 3:15 மணிக்கு புறப்பட்ட விமானம் வானில் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு மேலும் விமானத்தை தொடர்ந்து பறந்தால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என முன்னெச்சரிக்கையாக தரையிறக்க விமானிகள் முற்பட்டனர் சுமார் 30 நிமிடம் வானில் வட்டமிட்டு கொண்டே இருந்தது.
உள்ளே இருந்த பயணிகளுக்கும் சந்தேகம் வந்தது புறப்பட்ட விமானம் இன்னும் நமது ஊருக்கு அருகாமலேயே வட்டமடித்து கொண்டிருப்பது ஏன் என்று வானத்தில் உள்ள ஊழியரிடம் கேள்வி எழுப்பினர். ஒன்றும் பயப்பட வேண்டாம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே விமானம் தரையிறங்க உள்ளது என குறிப்பிட்டனர்.
3:55 மணிக்கு மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. மாற்று விமானம் மூலம் துபாய்க்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்கள் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருச்சியில் நீண்ட நேரம் விமானம் வானில் வட்டம் அடித்த நிகழ்வு விமானத்தில் பயணித்தோருக்கும், திருச்சி மக்களுக்கும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானத்திலேயே சுமார் இரண்டரை மணி நேரம் வட்டமடித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0