டித்வா புயல்; தமிழகத்தில் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை -தமிழக அரசு

Nov 28, 2025 - 20:02
 0  79
டித்வா புயல்; தமிழகத்தில் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை -தமிழக அரசு

கனமழை; தமிழகத்தில் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை -தமிழக அரசு

இலங்கை அருகே நிலவிவரும் டித்வா புயல், வட தமிழக கடலோரப் பகுதிகளை நாளை நெருங்கி வரக்கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டக் கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரம் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் இன வானிலை மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

க. சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1