பெரியார் மருந்தியல் கல்லூரியில் பிராணிகள் பராமரிப்புக் கூடம் திறந்து வைத்த அமைச்சர்கள்

Aug 23, 2025 - 11:24
 0  8
பெரியார் மருந்தியல் கல்லூரியில் பிராணிகள் பராமரிப்புக் கூடம் திறந்து வைத்த அமைச்சர்கள்

பெரியார் மருந்தியல் கல்லூரியில் பிராணிகள் பராமரிப்புக் கூடம் திறந்து வைத்த அமைச்சர்கள்

 பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆய்வுக்குப் பயன்படும் பிராணிகள் பராமரிப்பு கூடத்தினை (Animal House) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்து சிறப்பித்தார். முன்னதாக, பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் செந்தாமரை அனைவரையும் வரவேற்றார் 44 ஆண்டுகள் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணியில் சிறந்து விளங்கும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எலி வகைகளை பாதுகாக்கும் பிராணிகள் பராமரிப்புக் கூடம் 2000ஆம் ஆண்டு முதல் IAEC (Instituitional Animal Ethics Committee) அனுமதி பெற்று மருந்தியல் பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருந்துகளின் நச்சுத்தன்மை மற்றும் குணமாக்கும் தன்மைகளை எலிகளை கொண்டு பரிசோதனை செய்து ஆய்வின் முடிவினை துல்லியமாக அளிக்க பயன்படும் பிராணிகள் பராமரிப்புக் கூடமானது ரூபாய் 20 லட்சத்தில் புதிய கட்டிடத்தில் அனைத்து வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0