கனமழை; திருச்சி உள்பட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை; திருச்சி உள்பட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மழை காரணமாக கீழ் காணும் 10 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
1 தூத்துக்குடி
2 திருவாரூர்
3 கள்ளக்குறிச்சி
4 ராமநாதபுரம்
5 திருச்சி
6 தஞ்சை
7 புதுக்கோட்டை
8 மயிலாடுதுறை
9 விருதுநகர்
10 நாகை
க. சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0