சாய்பாபாவின் 100வது பிறந்த தினம்; இலங்கையில் சிறப்பு தபால் தலை வெளியீடு

Nov 23, 2025 - 17:21
 0  12
சாய்பாபாவின் 100வது பிறந்த தினம்;  இலங்கையில் சிறப்பு தபால் தலை வெளியீடு

சாய்பாபாவின் 100வது பிறந்த தினம்; இலங்கையில் சிறப்பு தபால் தலை வெளியீடு

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்த தினப் பெருவிழா நிகழ்வு, இலங்கை கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள சாயி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை காலை துவங்கியது.

இப்பெரு விழாவின் சிறப்பம்சமாக, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை அரசின் விசேச தபால் தலை வெளியீட்டு விழா இலங்கையில் அமைந்துள்ள சாயி மத்திய நிலையத்தில் நடைபெற்றது. சாய் மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கினங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பரிந்துரைக்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனையின்படி, இந்த விசேச தபால் தலை வெளியிடப்பட்டது.

தபால் தலை வெளியீட்டு விழாவில் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா, நீதிமன்ற நீதியரசர் பிரபா குமாரரத்னம் ஆகியோருடன், சாயி மத்திய நிலையத்தின் (இலங்கை) தலைவர் எஸ். என். உதயநாயனன், இலங்கை தபால் நிலைய தபால் தலை வெளியீட்டுப் பிரிவின் நிர்வாகி லங்கா டி சில்வா, விளம்பரப் பிரிவு அதிகாரி எஸ். ஜலதீபன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0