கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

Nov 22, 2025 - 15:20
 0  11
கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
 

   புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர், சிறந்த  விமர்சகருமான ஈரோடு தமிழன்பன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தனது 92-வது வயதில் இன்று நண்பகல் காலமானார். ஈரோடு தமிழ்ன்பன் மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் சிறந்தவர். சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளர், வாழ்க்கை வரலாற்றாசிரியர், சிறந்த சொற்பொழிவாளர் என எண்ணற்ற துறைகளில் தடம் பதித்த பன்முக ஆளுமை கொண்ட இவரின் கவிதைத் தொகுப்பான "வணக்கம் வள்ளுவ" நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
  சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதுடன், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக்குழு உறுப்பினராகவும், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சங்கத்தமிழின் பாரம்பரியத்தையும், நவீன் உணர்வுகளையும் இணைக்கும் சிந்தனைகளால் அனைவராலும் போற்றப்பட்டவர். பாரதிதாசன் மரபில் வந்த இவர், வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒருவர். "அரிமா நோக்கு" என்ற ஆய்விதழின் ஆசிரியர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
  சிந்தனைக்கவிஞரின் மறைவுக்கு கவிஞர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0