இயந்திரம் மூலம் நடவு; வயலில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

Nov 19, 2025 - 19:49
 0  10
இயந்திரம் மூலம் நடவு; வயலில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

இயந்திரம் மூலம் நடவு செய்த வயலில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

திருவெறும்பூர் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் பற்றி வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவெறும்பூர் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் மத்திய திட்டங்களான தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், அணுசாரணை ஆராய்ச்சி திடல் மற்றும் வேளாண்மை தொழில்நுட்பம் மேலாண்மை முகமை அட்மா திட்டம் போன்ற திட்டங்களை வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் ராஜசேகர் ஆய்வு செய்தரர். 

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாழவந்தான் கோட்டை கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்ற விவசாயி நெல் இயந்திரம் மூலம் நடவு செய்த திடலை பார்வையிட்டு நடவு இயந்திரத்திற்குண்டான வாடகை குறித்து கேட்டறிந்து நெல் இயந்திர நடவு பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களை ஆய்வு செய்து செயல்விளக்கம் திட்டத்தின் கீழ் குமார் என்ற விவசாயிக்கு கையடங்கு பால் கறவை இயந்திரத்தை முழு மானியத்தில் வழங்கி அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். 

வேங்கூர் கிராமத்தில் முத்துக்குமார் என்ற விவசாயியின் வயலில் அமைத்துள்ள அணுசாரணை ஆராய்ச்சி திடலை பார்வையிட்டார்.

ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் சுகன்யா தேவி, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் நாகராஜன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் திலகவதி, செல்வலட்சுமி உடன் இருந்தனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0