வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; 6 இலட்சம் படிவங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம்-ஆட்சியர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்;
6 இலட்சம் படிவங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம்-ஆட்சியர்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 - ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும் பொருட்டு, திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட சிறப்பு தீவிர திருத்தப்பணியில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,543 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு முன் நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கிடும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 23,68,968 எண்ணிக்கையிலான மொத்தவாக்காளர்களில், நாளதுதேதிவரை 21.90 இலட்சம் எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு முன் நிரப்பப்பட்ட படிவங்கள், வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முன் நிரப்பப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து 6 இலட்சம் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் மீளபெறப்பட்டு வாக்குசாவடி அலுவலர்களால் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி சட்டமன்றத்தொகுதி எண் 141 –திருச்சிராப்பள்ளிகிழக்கு, 145 –முசிறி, 146 –துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் பணிமுன்னேற்ற அறிக்கை குறைவாக உள்ள பாகங்களில் சிறப்பு தீவிர திருத்த பணியினை திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்டஆட்சியருமான வே.சரவணன்,143 - இலால்குடி, 144 –மண்ணச்சநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திருச்சிராப்பள்ளி கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஆர்.பாலாஜியும் நேரடியாக ஆய்வு செய்து பணி முன்னேற்ற அறிக்கைகளை கேட்டறிந்தும் முன்நிரப்பப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து மீள பெறப்படும் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0