திருச்சி மத்திய சிறையில் மோதல்; 4 பேர் மீது வழக்கு; ஆட்சியர்-காவல் ஆணையர் பேச்சுவார்த்தை

Nov 19, 2025 - 13:45
 0  2
திருச்சி மத்திய சிறையில் மோதல்; 4 பேர் மீது வழக்கு; ஆட்சியர்-காவல் ஆணையர் பேச்சுவார்த்தை

திருச்சி மத்திய சிறையில் மோதல்; 4 பேர் மீது வழக்கு- 
ஆட்சியர்-காவல் ஆணையர் பேச்சுவார்த்தை

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், போலி பாஸ்போர்ட், சட்டவிரோதமாக தமிழகத்தில் குடியேறிய மற்றும் விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்தவர்கள் என பல்வேறு குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட இலங்கை, சூடான், நைஜீரியா, பல்கேரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
   இதில் நைஜீரியா மற்றும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே இன்று அதிகாலை கடும் சண்டை, மோதல்கள் என பல்வேறு சர்ச்சைக்குறிய நிகழ்வுகள் ஏற்பட்டதால் மற்ற வெளிநாட்டு கைதிகளின் உயிருக்கு அச்சம் ஏற்பட்டது.
   இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாநகர காவல் ஆணையர் ந.காமினி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பு கைதிகளிடமும் அதிகாலை பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
   கைதிகள் மோதல் சம்பவத்தால் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
   இந்த மோதல்களை அடுத்து சிறப்பு முகாம் கதவுகளை உடைத்துக் கொண்டு, வெளியே தப்பியோட முயன்ற, நைஜீரியாவை சேர்ந்த ஃபிரான்சிஸ், யூசுஃப், பீட்டர், ஜேம்ஸ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின்னர், அவர்களை புழல் சிறைக்கு மாற்ற திருச்சி மாவட்ட நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0