கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து பேசுகிறார்கள் - திருச்சியில் கமலஹாசன்
கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து பேசுகிறார்கள் - திருச்சியில் கமலஹாசன்
திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் திருச்சி வருகை தந்தார். திருச்சி ராஜா காலனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த கமல் இன்று தஞ்சாவூர் மாவட்டம் புது கரியப்பட்டி பகுதியில் சமீபத்தில் உயிரிழந்த கவிஞர் சினேகன் தந்தை பட திறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றார்.
பின்னர் மாலை தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்தவர் திருவெறும்பூரில் திருச்சி மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் தெரிவித்ததாவது;
சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை செய்தோம். பூத் கமிட்டி குறித்து ஆலோசனை செய்தோம். எங்கள் கூட்டணி கட்சிகளின் பெருமையும் அதனால் ஏற்படப்போகும் நன்மையையும் குறித்து எடுத்துரைத்தேன். ஏன் கூட்டணி என்பது குறித்து விளக்கி உள்ளேன். நாங்கள் வைத்துள்ள கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து சில கருத்துக்களை கூறுகிறார்கள்.
எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து உங்களிடமா பேசுவது என கூறி சென்றார்.
இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் உள்பட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0