எஸ் ஐ ஆர் ;வருவாய்த் துறை ஊழியர்கள் ஸ்ட்ரைக்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை நாளை(நவ.18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த் துறை ஊழியர்கள் அறிவிப்பு.
பணி நெருக்கடி இருப்பதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டி,. மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் இன்று(நவ.17) மாலை எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
போராட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களும் பங்கேற்பு.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு உரிய காலஅவகாசம் வழங்க வலியுறுத்தல்.
அரசு விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்கவும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்-ஊழியர்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0