கீரனூர் அருகே சாலையில் தரை இறங்கிய விமானம்; செல்பி எடுக்க குவிந்த மக்களால் பரபரப்பு; அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்ப்பு
கீரனூர் அருகே சாலையில் தரை இறங்கிய விமானம்; செல்பி எடுக்க குவிந்த மக்களால் பரபரப்பு; அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி பேருந்துகள் பயணிக்கும் சாலையில் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திடீரென திருச்சி புதுக்கோட்டை சாலையில் சிறிய ரக விமானம் தரையிறங்கியது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவிர்க்க இயலாத சூழ்நிலையில், திடீரென சாலையில் விமானம் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருவர் மட்டுமே பயனித்தனர் விமானத்திற்கும் விமானத்தில் பயணித்த இருவருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் உன்னட்டை ஆம்புலன்ஸ் மூலம் அதில் பயணித்த இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தின் முகப்பு பகுதியில் மட்டும் சிறுசேதம் ஏற்பட்டது.
விமானம் தரையிறங்கும் போது, அந்த வழியில் வாகன போக்குவரத்து எதுவும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது.
தற்போது விமானம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து மட்டுமே இருக்கும் தார் சாலையில், திடீரென விமானம் தரை இறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நபர்கள், விமானத்தை வேடிக்கை பார்க்கவும், செல்பி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடவும் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
1