மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை - திருச்சி நீதிமன்றம்

Nov 13, 2025 - 09:21
 0  12
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை - திருச்சி நீதிமன்றம்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை - திருச்சி நீதிமன்றம்

ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளிடகரையில் உள்ள பத்ரிநாராயணன் என்பவரது தோப்பில் குடியிருந்து வரும் 60 வயது மூதாட்டியின் 22 வயதுடைய மாற்றுத்திறனாளி (வாய்பேச முடியாதவர்) பேத்தியை, தஞ்சாவூர் மாவட்டம் மானன்சாவடியை சேர்ந்த வினோத் என்பவர் கடந்த 22.11.2022-ந்தேதி மாலை அதே தோப்பில் வைத்து பாலியில் வன்கொடுமை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் வினோத்தை கைது செய்த காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

இது தொடர்பான வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த 23.01.2023-ந்தேதி மேற்படி வினோத் மீது குற்றப்பத்திரிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

மேற்படி வழக்கில் திருச்சிராப்பள்ளி , மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட வினோத் பாலியில் வன்கொடுமை செய்தது நிரூபணம் ஆனதால் குற்றவாளி வினோத்துக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி வெகுவாக பாரட்டினார்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0