திருச்சிக்கு வந்தார் முதல்வர்; அமைச்சர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு
திருச்சிக்கு வந்தார் முதல்வர்; அமைச்சர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு
திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த முதல்வருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
திருச்சியில் புதிதாக 767 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காகவும், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் முதல்வரை மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த தொண்டர்களை சிறிது தூரம் நடந்து சென்று முதல்வர் சந்தித்து வரவேற்பை பெற்றுக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சுற்றுலா மாளிகை சென்றடைந்தார். சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர் நாளை காலை ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி இல்ல திருமண விழா சோமரசம்பேட்டை கலைஞர் திடலில் நடைபெறுகிறது. அந்த திருமண நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்துகிறார். தொடர்ந்து அங்கிருந்து புதுக்கோட்டை செல்லும் முதல்வர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடக்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருச்சி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி பொன்மலைப்பட்டி அருகே முதியவர்களுக்கான அன்புச்சோலை என்கிற திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தமிழக முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.
முன்னதாக, அமைச்சர் கே என் நேரு தமது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை சென்னையில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
1
Wow
0