தெலுங்கானாவில் பெரும் சோகம்; பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 24 பேர் பலி

Nov 3, 2025 - 09:57
Nov 3, 2025 - 10:20
 0  22
தெலுங்கானாவில் பெரும் சோகம்; பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 24 பேர் பலி

தெலுங்கானாவில் பேருந்து டிப்பர் லாரி மோதி விபத்து; 24 பேர் பலி

தெலங்கானா மாநிலம் சேவல்லா மந்தல் அருகே மிர்சாகுடாவில் நடைபெற்ற விபத்தில் 24 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆந்திர மாநிலம் தண்டூர் பணிமனைக்கு சொந்தமான மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதையடுத்து லாரியில் இருந்து சரளை கற்கள் அனைத்தும் பேருந்து மீது விழுந்தன. 

இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 24 பயணிகள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்து சென்றனர். மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பேருந்து மற்றும் லாரியை தனித்தனியே நகர்த்தினர். மேலும் சரளைக் கற்களையும் அகற்றியுள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பலர் மோசமான நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், தண்டூரில் இருந்து ஹைதராபாத் நகருக்கு 70 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள். ஞாயிறு விடுமுறையை சொந்த ஊரில் கழித்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர். 

இந்த சூழலில் ஹைதராபாத் – பிஜபூர் நெடுஞ்சாலையில் லாரி உடன் மோதி கோர விபத்தை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் சேவல்லா – விகாராபாத் வழித்தடத்தில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்று விசாரித்து வருகிறோம். அரசு பேருந்தை லாரி ஓட்டுநர் ஓவர்டேக் செய்ய முயற்சித்த போது விபத்து நடந்ததா? இல்லை தவறான திசையில் பயணித்தார்களா? போன்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். 

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0