கல்லறை திருநாள்; முன்னோர்களுக்கு மலரஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்
கல்லறை திருநாள்; முன்னோர்களுக்கு மலரஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நவம்பர் 2 ஆம் தேதி, கல்லறை திருநாள் அல்லது சகல ஆத்துமாக்களின் திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவர்கள் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளுக்குச் சென்று மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், வழிபாடு செய்தும், மரியாதை செலுத்துவது வழக்கம்.
அதன்படி, திருச்சியில் கல்லறைத் தோட்டங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, மலர்கள் கொண்டு அலங்காரம் செய்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு முன்னோர்களை நினைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும், முன்னோர்களை நினைத்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர்.
இதேபோன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம், நீதிமன்றம் எதிரே உள்ள கல்லறை தோட்டம், எஸ் ஐ டி அருகே உள்ள கல்லறை தோட்டம், பொன்மலைப்பட்டி கல்லறை தோட்டம் உள்பட பல்வேறு கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவ மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்து பிரார்த்தனை, கூட்டு திருப்பலிகளில் ஈடுபட்டனர்.
திருச்சி மேலபுத்தூர் பகுதியில் இரு சமூகத்தை சேர்ந்த கல்லறை தோட்டம் அருககே இருந்த காரணத்தால் எந்தவித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க மேலப்புதூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0