ஓயாமாரி மின் மயானம் தற்காலிகமாக மூடல்

Nov 2, 2025 - 12:58
Nov 2, 2025 - 13:02
 0  35
ஓயாமாரி மின் மயானம் தற்காலிகமாக மூடல்

ஓயாமாரி மின் மயானம் தற்காலிகமாக மூடல்

 

   திருச்சி மாநகரில் மிகவும் பிரபலமான பிரேத எரியூட்டும் மைதானமான ஓயாமாரி மின் மயானம் பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம்-I, பிரிவு-III, வார்டு எண்15-க்குட்பட்ட ஓயாமாரி இடுகாடு மயானத்தில் எரிவாயு தகன மேடை (2 எண்ணிக்கை) (LPG Gas Furnace) மூலம் சடலங்களை எரியூட்டும் இடம் உள்ளது. இந்த தகன மேடைகளில் பழுது ஏற்ப்பட்டுள்ளதால் அதனை மாற்றம் செய்யும் பணி நடைபெறவுள்ளது. 
   இதன் காரணமாக நாளை முதல் 18-ம் தேதி (03.11.2025 - 18.12.2025) வரை 45 நாட்களுக்கு பிரேத உடல்களை எரியூட்ட இயலாது என்பதால் ஓயாமாரி இடுகாடு மயானம் தற்காலிகமாக மூடப்படுக்கிறது.
    எனவே, அதற்கு பதிலாக அருகில் உள்ள வார்டு எண்:4-ல் திருவானைக்கோவில், அம்பேத்கார் நகர் மற்றும் வார்டு எண்:11-ல் உறையூர், கோணக்கரையில் செயல்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மையங்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
   மேற்க்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்  தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0