பாரதிதாசன் பல்கலையில் பூமியையும், புவி வளத்தையும் பாதுகாக்க 3 நாள் பயிற்சி பட்டறை
பாரதிதாசன் பல்கலையில் பூமியையும், புவி வளத்தையும் பாதுகாக்க 3 நாள் பயிற்சி பட்டறை
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள நிலத்தியல் துறையின் சார்பாக மூன்று நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிலத்தியல் துறையின் தலைவரும் பயிற்சி பட்டறையின் ஒருங்கிணைப்பு செயலாளருமான பேராசிரியர் ஆர்.சக்திவேல் பயிற்சி பட்டறையின் நோக்கம் குறித்து எடுத்துரைத்து, விருந்தினர்களையும் பங்கேற்பாளர்களையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பேராசிரியர் வி.ராஜேஷ் கண்ணன் தலைமை உரையாற்றினார். இந்திய அரசின் ஜியாலக்கல் சர்வே ஆப் இந்தியா (GSI) நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குனர் முனைவர் கே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தற்போது ஜியாலஜி, ஜியோ பிசிக்ஸ், ஜியோ கெமிஸ்ட்ரி பிரிவுகளில் ஏற்பட்டுள்ள ஆய்வு முன்னேற்றங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஜியாலஜியின் படிப்பின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய அளவில் ஜியாலஜி படிப்பிற்கு உள்ள வேலை வாய்ப்புகளையும் விளக்கிக் கூறி, பூமியையும், புவி வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவருமான பேராசிரியர். ஏ.அழகப்பா மோசஸ், சுற்றுச்சூழல் புவி வேதியலின் அடிப்படைகள் மற்றும் பயன்பாடுகளை எடுத்துரைத்து மாசு மதிப்பீடு நிலத்தடி நீர் தர மதிப்பீடு. நிலையான வள மேலாண்மை ஆகியவற்றில் ஜியாலஜியின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக உயிர் தகவல்கள் துறையின் தலைவர் பேராசிரியர் செல்லபாண்டி புவி வேதியியல் பகுப்பாய்வு நடைமுறை பயிற்சிகள் குறித்து பங்கேற்பாடுகளுக்கு தெளிவான செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
மேலும், தேசியக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், மண்ணியல் துறையின் முன்னாள் தலைவருமாகிய பேராசிரியர் வி. சுப்பிரமணியன் புவி அறிவியலின் ஒரு பகுதியான ஜியோ பிசிக்ஸ் மற்றும் அதன் பல்வேறு வகையான கணக்கெடுப்பு முறைகளை தெளிவாக பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஜியோ பிசிகல் சர்வே முறைகளை பங்கேற்பாளர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருச்சி மண்டல இணை நிலத்தடி நீரியல் நிபுணர் தர்மலிங்கம், துணை நிலத்தடி நீரியல் நிபுணர் கே.ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்பாளர்களுக்கு பஞ்சப்பூர் அருகில் களத்தில் பயிற்சி அளித்து பங்கேற்பாளர்களை சர்வே செய்ய செய்தனர்.
அதேபோல், புவி வேதியியல் குறித்த அடிப்படை தகவல்களை பங்கேற்பாளர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக புவிய அறிவியல் துறையின் பேராசிரியர் ஆர்.பிரபாகரன் விரிவாக எடுத்துரைத்தார். புவி வேதியலின் பல்வேறு முறைகளையும் அதில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் திருச்சி தேசிய கல்லூரி மன்னியல் துறை இணை பேராசிரியர் வி.வசந்த மோகன் தெளிவான புரிதலை ஏற்படுத்தினார்.
நிறைவு விழாவில், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கே.காளிதாசன் தலைமை உரையாற்றினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பேராசிரியர் கே.சங்கர் சிறப்புரையாற்றினார். புவியியல் துறையின் உதவி பேராசிரியர் மாசிலாமணி வாழ்த்துரை வழங்கினார். பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கே.காளிதாசன், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பேராசிரியர் கே.சங்கர் ஆகியோர் வழங்கினர்.
பயிற்சி பட்டறையின் ஒருங்கிணைப்பாளரும், நிலத்தியல் துறையின் தலைவருமான பேராசிரியர் சக்திவேல் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0