பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாணவிகளுக்கு மரக்கன்றுகள்

Oct 31, 2025 - 18:04
 0  24
பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாணவிகளுக்கு மரக்கன்றுகள்

பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாணவிகளுக்கு மரக்கன்றுகள் 

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவனத்தில் இயங்கி வரும் பாய்லர் பிளான்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை சி. புவனேஸ்வரி தலைமை வகித்தார். பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முதுகலை அறிவியல் ஆசிரியை எஸ் சசிகலா முன்னிலை வகித்தார். தமிழாசிரியை ம.அருணா தேவி வரவேற்றார். 

இதில் சிறப்பு விருந்தினராக பெல் நிறுவன ஊரக சிவில் துறை மேலாளர் ஜே.பி. அகிலா கலந்து கொண்டு மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி, மாணவிகளிடம் தன் சுத்தம் பேணுதலின் முக்கியத்துவம், உடல்நலம், நல்ல உணவு முறை, நல்ல பழக்கவழக்கங்கள், கல்வியின் அவசியம், ஆகியவை குறித்து விளக்கி ஊக்க உரையாற்றினார். விழாவில் பள்ளியில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாணவிகளுக்கும் நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0