வால்பாறைக்கு செல்கிறீர்களா? நவம்பர் 1 முதல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.....,
வால்பாறைக்கு செல்கிறீர்களா, நவம்பர் 1ம் தேதி முதல் கடும் கெடுபிடி
சுற்றுலா ஸ்தலங்களாக விளங்கக்கூடிய ஊட்டி கொடைக்கானல் மலை வாசஸ்தலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறை இனி வால்பாறைக்கும் பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;
கோயம்புத்தூர் மாவட்டத்தின் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை பிரபல சுற்றுலா தளமாக உள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் www.tnepass.tngov.in என்ற இணையதளத்தில் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும், இதனை கண்காணிக்க ஆழியாறு மற்றும் மழுக்கு பாறை சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0