பெங்களூர் சென்ற ஆம்னி பேருந்தில் பயங்கர தீ; 15 பயணிகள் உடல் கருகி பலி

Oct 24, 2025 - 09:23
Oct 24, 2025 - 09:30
 0  78
பெங்களூர் சென்ற ஆம்னி பேருந்தில் பயங்கர தீ; 15 பயணிகள் உடல் கருகி பலி

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற பேருந்தில் பயங்கர தீ; 15 பயணிகள் உடல் கருகி பலி

ஆந்திரத்தில் ஹைதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலியாகினர். 12 பேர் அவசரகால வழி மற்றும் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 15 பயணிகள் பலியானதாகவும் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் சிறிது தூரம் மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்துச் சென்றதில் மோட்டார் சைக்கிள் பேருந்துக்கு அடியில் சென்றதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 42 பேர் இருந்ததாகவும், அதிகாலை நேரம் என்பதால் நல்ல உறக்கத்தில் இருந்த பயணிகள் திடீரென கண்விழித்து பார்த்தபோது பேருந்து தீப்பிடித்து எரிவதை பார்த்து கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டவாறு பேருந்தின் அவசரகால வழி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். இதில் 12 பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர் மற்றும் 15 பேர் பேருந்து தீயில் சிக்கி பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தில் 42 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்து சம்மவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அந்த பகுதியில் பெய்த கனமழையால் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பேருந்து தீப்பிடித்த உடனேயே பேருந்து ஓட்டுநர் உள்பட பேருந்து ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மணிக்கணக்கில் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையிலே காத்திருந்தன.

பேருந்து தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்தப் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0