கரூர் பெருந்துயரம்; நீதிமன்றத்திற்கு சிபிஐ கடிதம்

Oct 23, 2025 - 20:54
 0  34
கரூர் பெருந்துயரம்; நீதிமன்றத்திற்கு சிபிஐ கடிதம்

கரூர் பெருந்துயரம்; நீதிமன்றத்திற்கு சிபிஐ கடிதம்

நடிகர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. கடந்த எட்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அது தொடர்பான முன் அறிக்கை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில், உயர் நீதிமன்றம் அக்.3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது. அக்.5-ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அக்.13-ம் தேதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, அக்.16-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்தனர். அக்.17-ம் தேதி சிபிஐயிடம் வழக்கு ஆவணங்களை எஸ்ஐடி ஒப்படைத்தது. அக்.19-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சிலர் தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், இன்ஸ்பெக்டர் நிலையிலான அதிகாரி கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி எஸ்ஐடி ஒப்படைத்த ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், சிபிஐ-யில் இருந்து கரூர் நீதிமன்றத்துக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மாஜிஸ்ட்ரேட் சார்லஸ் ஆல்பர்ட்டிடம் சிபிஐ அதிகாரிகள் இந்தக் கடிதத்தை இன்று (அக்.23) ஒப்படைத்தனர். குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் விடுப்பு என்பதால் அக்கடிதம் நீதிமன்றம் 2-ல் ஒப்படைக்கப்பட்டது. கடிதம் பிரித்து பார்க்கப்படாததால் அந்தக் கடிதத்தில் உள்ள விவரங்கள் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0