பெல் வளாக பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர்-ஆசிரியை தகாத உறவு; கணவரின் புகாரால் தலைமை ஆசிரியர் பணி நீக்கம்

Oct 22, 2025 - 15:11
Oct 22, 2025 - 15:12
 0  458
பெல் வளாக பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர்-ஆசிரியை தகாத உறவு; கணவரின் புகாரால்  தலைமை ஆசிரியர் பணி நீக்கம்

பெல் வளாக பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர்-ஆசிரியை தகாத உறவு; கணவரின் புகாரால்  தலைமை ஆசிரியர் பணி நீக்கம்

   திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு பணியாற்றும் பெண் கணினி உதவியாளரிடம் திருமண உறவுக்கு மீறிய தகாத பழக்கத்திலிருந்த தலைமை ஆசிரியரை கட்டாய விருப்ப ஓய்வுக்கு செல்ல பள்ளி நிர்வாகம் அறிவுறுத்திய சம்பவம் திருச்சி மாவட்ட கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் பெல் நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என 5 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் செயல்பட்டு வரும் ஒரு அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 55 வயது கொண்ட தலைமை ஆசிரியர் பெல் குடியிருப்பில் தங்கி 21 வருடம் பள்ளி ஆசிரியராகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகவும் வேலை பார்த்து வந்தார். 
   இந்த நிலையில் பெல் குடியிருப்பை சேர்ந்த பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் 34 வயது கொண்ட மனைவி அதே பள்ளியில் ஒப்பந்த கணினி உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். ஒரே பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியருக்கும், அந்தப் பெண் ஆசிரியைக்கும் இடையே திருமண உறவுக்கு மீறிய தகாத பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் எல்லை மீறி சென்றதாகவும் கூறப்படுகிறது.
   அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சக பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியரின் கணவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சென்ற தலைமை ஆசிரியர் அந்த பெண் ஆசிரியருடன் உல்லாசமாக இருந்திருக்கின்றார்.
   இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக அந்த பெண் ஆசிரியரின் கணவர் திடீரென வீட்டிற்கு வந்தபோது, தனது மனைவியுடன், பள்ளி தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்ததோடு அக்கம் பக்கத்தாரை அழைத்து விபரத்தை தெரிவித்தார். 
   இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சக பெல் ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசு உதவி பெரும் பள்ளியின் தலைமை ஆசிரியரையும், பெண் ஆசிரியையும் கண்டித்து, தலைமை ஆசிரியரை விரட்டியடித்திருக்கின்றனர்.
 மேலும், இந்த சம்பவம் குறித்து அந்த ஆசிரியையின் கணவர் தான் பணியாற்றும் பெல் நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கின்றார். அந்தப்புகாரின் அடிப்படையில் பெல் நிர்வாகம், பள்ளி நிர்வாகத்திடம் பேசி தமது வளாகத்தில் இயங்கக்கூடிய ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு நன்நடத்தை போதிக்கவேண்டியவரே ஆசிரியையிடம் தகாத உறவு வைத்திருந்தது அதிர்ச்சியாக இருப்பதாகவும்,  உடனடியாக அந்த தலைமை ஆசிரியரை பள்ளியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கடிந்துக்கொண்டதோடு, பெல் வளாக குடியிருப்பிலிருந்தும் அவரை உடனே வெளியேற்ற வலியுறுத்தியது.
   இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் உடனடியாக அந்த தலைமை ஆசிரியரை பள்ளிக்குள் அனுமதிக்காமல் அனுப்பியதோடு மருத்துவர் விடுப்பில் செல்ல அறிவுறுத்தியதோடு, கட்டாய விருப்ப ஓய்வில் செல்வதாக அவரிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டு, பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த தலைமை ஆசிரியருக்கு பெல் வளாகத்தில் உள்ள குடியிருப்பிலிருந்தும் உடனடியாக வெளியேற பெல் நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது. இதனால் அவர் இரவோடு இரவாக வீட்டை காலி செய்துக்கொண்டு பெல் வளாகத்தை விட்டு வெளியேறினார். 
   பெல் வளாகத்தில் இயங்கக்கூடிய அரசு உதவி பெரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை தகாத உறவில் ஈடுபட்டு பெல் நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் பெல் மற்றும் திருச்சி மாவட்ட கல்வி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  முன்னதாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து இருவரும் கட்டாய விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0