காவலர் வீர வணக்க நாள்: சென்னையில் முதல்வர்; திருச்சியில் காவல் ஆணையர் வீரவணக்கம்
காவலர் வீர வணக்க நாள்: சென்னையில் முதல்வர்; திருச்சியில் காவல் ஆணையர் வீரவணக்கம்
நாடு முழுவதும் இன்று காவலர் வீர வணக்கம் நாள் கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
கடந்த 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி தமிழ்நாட்டில், காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு (Police Commemoration Day) வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில், காவலர் வீரவணக்க நாளான இன்று (21.10.2025) பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே சுப்பிரமணியபுரம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இருக்கும் காவலர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி வீரவணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், காவல் பணியாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற “காவலர் வீர வணக்க நாள்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உயிர் நீத்த காவலர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். அதன் பின்னர் பணியில் மறைந்த காவல் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீடு காசோலை மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0