உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீச்சு; சநாதனவாதிகளை கண்டித்து திகவினர் ஆர்ப்பாட்டம்
நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு; ஸநாதனவாதிகளை கண்டித்து திக ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசி நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள காதி கிராப்ட் அருகில் இன்று திராவிட மாணவர் திக மாநில செயலாளர் இரா. செந்தூர பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவரணி மாநில துணை செயலாளர் அறிவு சுடர் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் ந.கணேசன் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தீர்க்க தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் மகாமணி, மாவட்ட அமைப்பாளர் ஆல்பர்ட், மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் அம்பிகா, லால்குடி துணைத்தலைவர் ஸ்டார்சன், பாலச்சந்திரன், தனியரசு, பன்னீர்செல்வம், இசைமணி, திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் சங்கிலி முத்து, செயலாளர் தமிழ் சுடர், பெல் ஆறுமுகம், கல்பாக்கம் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0