தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் அக். 21ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் (அக்டோபர் 21ஆம் தேதி )பொது விடுமுறையாக அறிவிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியர்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி பண்டிகை எதிர்வரும் *20 ஆம் தேதி திங்கட்கிழமை* கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகையை வெளியூர்களில் பயிலும் *லட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள்* *வெளியூரில் பணிபுரியும் லட்சக்கணக்கான *ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தங்கள் உறவினர்களோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இது போன்று மிகப் பெரிய பண்டிகைகள் வரும் *பொழுது அடுத்த நாள் பொது விடுமுறையாக* அறிவித்து ஈடு செய்யும் *வேலை நாளாக* அறிவிக்கப்படுவது வழக்கம்.
பல்வேறு காலங்களில் தமிழ்நாடு அரசும் இத்தகைய ஏற்பாட்டை மாணவச் செல்வங்கள் ஆசிரிய பெருமக்கள் அரசு ஊழியர்கள் பயன் பெறுமாறு செய்துள்ளது.
இந்த ஆண்டு *20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை* கொண்டாடப்படுகிறது.
அடுத்த நாள் *செவ்வாய்க்கிழமை 21ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்தால்* தங்கள் சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாடிவிட்டு ஊர் திரும்ப கால அவகாசம் கிடைக்கும். இத்தகைய அறிவிப்பை *மாணவச் செல்வங்களும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்* மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகுந்த பயன் தரக்கூடிய ஒன்றாகவும் அமையும்.
பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை பரிசீலித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்கள் பொது விடுமுறை அறிவிப்பை வெளியிடுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
மேற்கண்டவாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் சு குணசேகரன், பொதுச் செயலாளர் சே நீலகண்டன், மாநில பொருளாளர் கூட்டாக விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0