நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப துரை வைகோவை சந்தித்த ஆசிரியர் கூட்டணியினர்

Oct 14, 2025 - 23:57
 0  11
நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப துரை வைகோவை சந்தித்த ஆசிரியர் கூட்டணியினர்

நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப துரை வைகோவை சந்தித்த ஆசிரியர் கூட்டணியினர்

மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவை டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளருமான நீலகண்டன் தலைமையில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலையில், மாநில, மாவட்ட வட்டார நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து ஆசிரியர்களுக்கும் நடத்த வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது சம்பந்தமாக தமிழக அரசு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளதை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசை தகுதி தேர்வு தேவையில்லை என்று சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் கட்டாய உரிமைச் சட்டம் 2009 இல் பிரிவு 23 இல் திருத்தம் செய்ய வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என டிடோஜாக் மாநில அமைப்பின் முடிவின்படி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கை தொடர்பாக விரிவாக நம்மிடம் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, அவசியம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் டிட்டோஜாக் அமைப்பில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் ஐசக் டேவிட் பெர்ஜித் ராஜன் சுரேஷ் ராஜ், ஹக்கிம் அலி, பவுல்ராஜ் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி குமரகுருபரன், பாலகிருஷ்ணன் ஞானமுத்து, ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0