ஏ.ஐ.டி.யு.சி.சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Oct 9, 2025 - 11:29
 0  2
ஏ.ஐ.டி.யு.சி.சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி.சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

   திருச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யு.சி. சாரிபில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் தலைமை தாங்கினார். 
   ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய  மாதர் தேசிய சம்மேளன மாநில தலைவர் ஜி.மஞ்சுளா, தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலாளர் த.இந்திரஜித் ஆகியோர் விளக்க உரையாற்றினர். அதில், குறைந்தபட்ச ஊதியம் அமலாக்கப்பட வேண்டும், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறை கைவிடப்பட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், முதலாளிகளின் அழுத்தத்துக்கு தொழிலாளர்துறை அடிபணிகிறது. ஒன்றிய அரசு முன்வைத்து இன்னும் நிறைவேற்றப்படாத நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும், நடைமுறையில் மாநில அரசின் தொழிலாளர் துறை செயல்படுத்தி வருகிறது. தொழில்துறையில் முன்னணியில் இருப்பதைப் போலவே, தொழிலாளர் நலன் காப்பதிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்த நிலை படிப்படியாக கீழ் இறங்குவது வருந்தத்தக்கது. இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் அவசரமான அவசிய கடமையாகும் என்பதனை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


   ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்டத் துணைத் தலைவர் ஜனசக்தி உசேன், மாவட்டச் செயலாளர்கள் முருகன், லோகநாதன் மற்றும் சுரேஷ், முத்துசாமி உள்ளிட்டோரும் உரையாற்றினர். இறுதியாக ஆட்டோ முருகேசன் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0