நாங்கள் அடிமையா? – அதிகாரியிடம் எதிர்வினை செய்த ஏ.ஆர். ஓட்டுநர்; ஏசி பதிவு செய்த காணொளி சமூக ஊடகங்களில் வைரல்
நாங்கள் அடிமையா? – அதிகாரியிடம் எதிர்வினை செய்த ஏ.ஆர். ஓட்டுநர்; ஏசி பதிவு செய்த காணொளி சமூக ஊடகங்களில் வைரல்
சமீபகாலமாக காவல்துறையில் உயர் அதிகாரிகள் சக காவலர்களை திட்டி மிரட்டும் ஆடியோ, காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி காவல்துறைக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது.
அந்த வகையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே ஏ.ஆர் ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவு கொசுவலை பயன்படுத்தியதற்காக அதிகாரி திட்டும் காணொளியும் வாக்குவாதமும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருச்சியில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கான பாதுகாப்புபணியில் திரளான போலீசார் ஈடுபட்டிருந்தனர், இந்நிலையில் அதிகாலை பணியில் இருந்த ஏ.ஆர். ஓட்டுனர் ஒருவர் கொசுவலை பயன்படுத்தி தான் முழு யூனிஃபார்ம் உடன் படுத்து கொண்டு இருந்தார். இதனைப் பார்த்த ஏசி ஜான் கென்னடி ஏ.ஆர் ஓட்டுனரை திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு ஏஆர் ஓட்டுநர் இந்த சுதந்திர தினம் பாதுகாப்பு பணி முடித்த பிறகு கொசுக்கடி அதிகமாக இருப்பதால் கொசு வலையை பயன்படுத்தி அமர்ந்து தான் இருந்தேன் என பதிலுக்கு பதில் பேசிய காணொளி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி உள்ளது.
பணி நேரத்தில் கொசு வலை பயன்படுத்தி ஏ ஆர் ஓட்டுநர் அமர்ந்து இருந்தாரே அதை நீங்கள் பார்த்தீர்களா, அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் மற்றும் காவலர்களிடையே பேசிய படியும், பெண் காவலர்களை மிரட்டியும் தனது செல்போனில் ஏசி பேசிய படியே வீடியோ பதிவு செய்து எடுத்தார்.
அப்போது ஏ ஆர் ஓட்டுநர் அனைத்தையும் கூறுங்கள் எனக் கூறி ஆவேசம் அடைந்தார். மேலும் ஒரு கட்டத்தில் நாங்கள் என்ன அடிமையா, எங்களை சாப்பிட்டீர்களா என்று ஒரு வார்த்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா, இன்று சுதந்திர தினம் தானே இன்று சுதந்திரமாக இருக்க விடுங்கள், எங்களை ஏன் அடிமையாகவே வைத்திருக்கிறீர்கள், நான் டூட்டியில் முறையாக தொப்பி மற்றும் காலணி சீருடைகள் அணிந்து தான் இருக்கிறேன், கொசுவலை பயன்படுத்தியது தவறா எனக் கேள்வி எழுப்பினார், மேலும் என்னை பற்றி பேசுங்கள் எதற்காக என் தாயை தந்தையை தவறாக பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய இந்த காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஓபன் மைக்கேல் ஒரு காவல் அதிகாரியிடம் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஏசி ஒருவர் தமது அலைபேசியில் எடுத்த காணொளி எப்படி பொதுவெளியில் வெளியானது என்பதை காவல்துறை நுண்ணறிவு பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தவறு யார் மீது இருக்கிறதோ அவர்கள் மீது துறை ரீதியான விசாரணையை திருச்சி மாநகர காவல் துறை மேற்கொள்ளும் என்றும் திருச்சி மாநகர காவல் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0