அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்; முன்னாள் எம்.பி.ப.குமார் பங்கேற்பு

Oct 3, 2025 - 17:24
 0  41
அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்; முன்னாள் எம்.பி.ப.குமார் பங்கேற்பு

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்; முன்னாள் எம்.பி.ப.குமார் பங்கேற்பு

   

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆனைக்கிணங்க, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.கே.டி. கார்த்திக் ஏற்பாட்டில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி கள ஆய்வுக்கூட்டம் கிளியூர், பத்தாளப்பேட்டை, திருநெடுங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பூத்களில் நடைபெற்றது.
   இந்தக் கூட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி பயிற்சி பொறுப்பாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான ரஞ்சித்குமார் முன்னிலையில் நடைபெற்றது.


    இதில் பூத் கமிட்டி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், ஆலோசனைகள் வழங்கிப் பேசினார் முன்னாள் எம்.பி.ப.குமார்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1