கரூரில் விஜய் பிரச்சாரம்: 11பேர் பலி; உயிரிழப்பு 29 ஆக உயர்வு?

Sep 27, 2025 - 20:45
Sep 27, 2025 - 20:51
 0  84

கரூரில் விஜய் பிரச்சாரம்: 29 நபர்கள் உயிரிழப்பு என தகவல்கள்

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, விஜய்யின் பிரசார பகுதியில் மின்தடை ஏற்பட்டது என தகவல் வெளியானது.

இந்நிலையில், கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் பேசும்போது, மணல் கொள்ளை, மணல் குவாரி, கனிமவள கொள்ளை உள்ளிட்ட உள்ளூர் விசயங்களில் அதிக கவனம் செலுத்தி பேசினார். தொடர்ந்து அவர், 6 மாதங்களில் ஆட்சி மாறும். காட்சி மாறும். அதிகாரம் கை மாறும் என்றும் பேசினார்.

 இந்நிலையில் அவரை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. நெரிசலில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.

நெரிசலில் சிக்கி 22 பேர் மயக்கமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், நெரிசலில் சிக்கி 10 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட ஆட்சியர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, போலீஸ் சூப்பிரெண்டு ஆகியோர் சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள், பெண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை பிரசார பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் கரூர் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்திருப்பதாக அங்குள்ள மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0