முதுகுத் தண்டு காயம் விழிப்புணர்வு "ஹம்சா மறுவாழ்வின் சக்கர நாற்காலி பேரணி"

Sep 26, 2025 - 17:37
 0  1
முதுகுத் தண்டு காயம் விழிப்புணர்வு "ஹம்சா மறுவாழ்வின் சக்கர நாற்காலி பேரணி"

முதுகுத் தண்டு காயம் விழிப்புணர்வு
"ஹம்சா மறுவாழ்வின் சக்கர நாற்காலி பேரணி"

   

  மூளை, முதுகெலும்பு மற்றும் எலும்பியல் மறுவாழ்வுக்கான முன்னணி வழங்குநரான ஹம்சா மறுவாழ்வு மையம், இன்று ஹம்சா சக்கர நாற்காலி பேரணி 2025-ஐ நடத்தியது. கண்டோன்மென்ட் காவேரி மருத்துவமனை ஹம்சா மறுவாழ்வு குழுமத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சுரேஷ் வெங்கிடா மற்றும் காவேரி மருத்துவமனையின் செயல்பாட்டுத் தலைவர் ஜெயக்குமார், முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பின் செயல் தலைவர் ஜெயராஜ் ஆகியோர் இணைந்து இந்தப் பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். 
     ஹம்சா மறுவாழ்வு மையத்தில் நிறைவடைந்த இந்தப் பேரணியில், முதுகுத் தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தப்பேரணியில் பங்கேற்றவர்கள் பாதுகாப்பு, மறுவாழ்வு, அணுகல் மற்றும் அதிகாரமளித்தல் குறித்த செய்திகளை விளக்கும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
   இந்தப்பேரணியின் முன்னதாக காவேரி மருத்துவமனையின் குழு மருத்துவ இயக்குநர் டாக்டர் சுரேஷ் வெங்கிடா, தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது; "முதுகெலும்பு காயம் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல. சரியான மருத்துவ பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் சமூக ஆதரவுடன், உயிர் பிழைத்தவர்கள் அர்த்தமுள்ள, உற்பத்தித் திறன் கொண்ட வாழ்க்கையை வாழ முடியும். விழிப்புணர்வு என்பது தடுப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான முதல் படியாகும்" எனத் தெரிவித்தார்.

   இந்த பேரணி, இயலாமை குறித்த கட்டுக்கதைகளை உடைத்தல், சாலைப் பாதுகாப்பை ஆதரித்தல் மற்றும் முதுகுத் தண்டு காயம் உள்ளவர்களுக்கு தடையற்ற சூழல்களை உருவாக்க சமூகத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பேரணியில், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சம வாய்ப்புகளை உறுதி செய்தல் மற்றும் முதுகுத் தண்டு காயம் அடைந்தவர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு சேவைகளை ஆதரித்தல் என்ற உறுதிமொழி ஏற்புடன் பேரணி நிறைவடைந்தது.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0