காவிரி ஆற்றில் புதைந்த விவசாயிகள்; திருச்சியில் பரபரப்பு
காவிரி ஆற்றில் புதைந்த விவசாயிகள்; திருச்சியில் பரபரப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தளவு புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி - அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிபடி மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்து செய்யாததை கண்டித்தும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கக்கோரியும், 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் உபரி நீரை ஐயாற்றில் திருப்பி விட வேண்டும், திருச்சி காட்டூர் பாப்பாகுறிச்சி பகுதியில் நூறாண்டு காலமாக குத்தகை விவசாயம் செய்த விவசாயிகளை ஏமாற்றும் முகமதியர்களிடம் இருந்து விவசாய நிலத்தை மீட்டு மீண்டும் குத்தகைக்கு கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0