மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதாராதா காலமானார்; திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் இரங்கல்

Sep 22, 2025 - 00:18
 0  62
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதாராதா காலமானார்;  திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் இரங்கல்

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதாராதா காலமானார்; திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் இரங்கல்

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாருமான கீதா ராதா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கீதா ராதா மறைக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 இன்று (22.09.25) மாலை 4.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

“மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், எனது தாயாருமான கீதா ராதா (வயது 86) இன்று (21.09.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக எண் 3, பின்னி ரோடு, மனசாரவா அபார்ட்மெண்ட், போயஸ் கார்டன், சென்னை - 86 இல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  மேற்கண்டவாறு ராதிகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

எம்.ஆர்.ராதாவுக்கு 3 மனைவிகள். அதில் 3வது மனைவி தான் கீதா. இவரது மகள்கள் தான் நடிகை ராதிகா மற்றும் நிரோஷா. இரண்டாவது மனைவி தனலட்சுமியின் மகன் ராதாரவி ஆவார். நடிகை ராதிகாவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0