முகநூல் மூலம் மோசடி; பெண் உள்பட மூன்று பேர் கைது: தனிப்படைக்கு திருச்சி எஸ் பி பாராட்டு
முகநூல் மூலம் மோசடி; பெண் உள்பட மூன்று பேர் கைது: தனிப்படைக்கு திருச்சி எஸ் பி பாராட்டு
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள புறத்தாக்குடியைச் சோ்ந்த வி. ஆரோக்கியசாமி என்பவா் தனது முகநூலில் கேபிட்டல் பைனான்ஸ் - லோன் என்ற விளம்பரத்தைப் பாா்த்து அதிலிருந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளார்.
மறுமுனையில் ஆசை வார்த்தை கூறி லோன் எடுப்பதற்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆவணக் கட்டணம் ரூ.1 லட்சம் வேண்டும் என தெரிவித்ததால் உடனடியாக ரூபாய் 1 லட்சம் அனுப்பினாா். இருப்பினும் கடன் தொகையை அவா்கள் விடுவிக்காததாலும், ஆரோக்கியசாமி அனுப்பிய பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் தாம் ஏமாற்றப்பட்டது உணர்ந்த ஆரோக்கியசாமி திருச்சி மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் திருச்சி மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட ஆய்வாளா் சுமதி தலைமையிலான தனிப்படை போலீஸாரும் சீக்கிரமாக விசாரித்தனா்.
முகநூலில் பழகி ஏமாற்றியவா்களின் கைப்பேசி எண்களை ஆய்வு செய்ததில், அவா்கள் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸாா் அங்கு சென்று திருப்பூா் புதூா் பிச்சம்பாளையம் எஸ். ஸ்ரீனிவாசன், அதே பகுதியைச் சோ்ந்த ஜோ. கணபதி, இவரது மனைவி கவிதா ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் இவா்கள் மோசடிக்கு பயன்படுத்திய 10 கைப்பேசிகள், 1 மடிக்கணினி, 1 மோடம், 10 சிம் காா்டுகள், வங்கிக் கணக்கு புத்தகங்களையும் பறிமுதல் செய்தனா்.
பின்னர், இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டு, துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் திருச்சி எஸ்.பி. செல்வநகரத்தினம்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0