திருவாரூரில் விஜய்க்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு

Sep 20, 2025 - 18:15
Sep 20, 2025 - 18:16
 0  16
திருவாரூரில் விஜய்க்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு

திருவாரூரில் விஜய்க்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாக கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று திருச்சியில் தொடங்கினார். அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இன்று (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதற்கட்டமாக திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இரண்டாம் கட்டமாக இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கமலாலய குளக்கரை பகுதிக்கு நகர்ந்தார்.

இந்நிலையில், திருவாரூக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரத்துடன் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த மாலை மரியாதையை விஜய் தனது பிரச்சார வாகனத்தை நிறுத்தி ஏற்றுக்கொண்டார். பின்னர் பிரச்சார பகுதிக்கு தொண்டர் மத்தியில் ஊர்ந்து சென்றார்.

அப்போது சிறு குழந்தை ஒன்று கட்சித் துண்டை ஏந்தி விஜய் நோக்கி சென்றது. அந்தக் குழந்தையிடம் கட்சி துண்டை வாங்கிக் கொண்ட விஜய் அந்த குழந்தைக்கு மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0