கண்டோன்மெண்ட் காவல் நிலைய சுவர் இடிந்து விபத்து

Sep 19, 2025 - 15:32
Sep 19, 2025 - 18:56
 0  14
கண்டோன்மெண்ட் காவல் நிலைய சுவர் இடிந்து விபத்து

   கண்டோன்மெண்ட் காவல் நிலைய சுவர் இடிந்து விபத்து

   திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய வளாகத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பெண் காவலர்களின் வாகனம் கடும் சேதத்திற்குள்ளானது. இதுகுறித்த விபரம் வருமாறு; 
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், குற்றப்பிரிவு காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை என பல்வேறு பிரிவுகள் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன.
  இந்த கண்டோன்மெண்ட் காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு காவல் கட்டுப்பாட்டு செயல்பாடுகள் செயல்பட்டு வருவதால் 24 மணி நேரமும் இந்த காவல் நிலையம் பரபரப்பாகவே காணப்படும். ஒருபக்கம் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் வருகை மற்றொரு பக்கம் அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் பணி நிமிர்த்தமாக வந்து செல்வது என எப்போதுமே பரபரப்பாக காணப்படும். காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே காவலர்கள் இருசக்கர வாகனங்களை கண்டோன்மெண்ட் காவல் நிலைய வளாக மதில் சுவர் அருகே நிறுத்துவது வழக்கம்.


   அதன்படி இன்று காலை மகளிர் காவல் நிலைய காவலர்கள் தத்தம் வாகனங்களை மதில் சுவர் அருகே நிறுத்தி விட்டு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
   அப்போது எதிர்பாராத விதமாக கண்டோன்மெண்ட் காவல் நிலைய மதில் சுவர் அருகே சாலை புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஜல்லியை பரப்பிக்கொண்டிருந்த பொக்லைன் வாகனம் ஒன்று ஜல்லிக்கற்களை சமன் செய்யும்போது எதிர்பாராதவிதமாக கண்டோன்மெண்ட் காவல் நிலைய மதில் சுவரில் பட்டதால் கடந்த சில தினங்களாக திருச்சியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டிருந்த மதில் சுவர் உள்பக்கமாக சாய்ந்து விழுந்தது.  இதில் மதில் சுவர் அருகே நிறுத்தி வைத்திருந்த காவலர்களின் இருசக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. சாலையிலும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


   இந்த விபத்து குறித்து கண்டோன்மெண்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலைய சுற்றுச்சுவர்(மதில்) இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0