திருச்சியில் பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர்; அமைச்சர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
திருச்சியில் பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர்; அமைச்சர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சுயமரியாதை, ஆளுமை திறன், பகுத்தறிவு பார்வை கொண்டதாக செயல்பாடுகள் அமையும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் கொள்கைகளுக்காக ஒப்படைப்பேன் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர் அன்பழகன், அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மா சுப்ரமணியன், எஸ் எஸ் சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, துரை வைகோ, அருண் நேரு, ராசா, கவிஞர் சல்மா உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய முதல்வர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர். திருச்சி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட முதல்வர் சாலை மாற்றமாக கரூர் சென்றடைந்தார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகர் முழுவதும் திரளான திமுகவினர் சாலையில் இருமருங்கிலும் நின்று வரவேற்பு கொடுத்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0